Tamil Islamic Pro செயலியைப் பயன்படுத்தும்போது எந்தத் தகவல்கள் பயன்படுகின்றன, ஏன், யாருடன் பகிரப்படுகின்றன என்பதை இந்தக் கொள்கை விளக்குகிறது.
This policy explains what information the Tamil Islamic Pro app uses, why, and who it is shared with.
1. தனிப்பட்ட தகவல்கள் / Personal information
உங்கள் பெயர், மொபைல் எண், email போன்ற எந்த அடையாளத் தகவலையும் நாங்கள் கேட்பதோ, சேகரிப்பதோ இல்லை. கணக்கு (login) எதுவும் தேவையில்லை.
We do not ask for or collect your name, phone number or email address. No account or sign-in is needed.
2. இருப்பிடம் / Location
தொழுகை நேரம், கிப்லா திசை, அருகிலுள்ள பள்ளிவாசல்களுக்கு உங்கள் இருப்பிடம் (GPS) பயன்படுகிறது. அது உங்கள் போனிலேயே வைக்கப்படுகிறது; எங்கள் server-களில் சேமிக்கப்படுவதில்லை. தொழுகை நேரத்தைக் கணக்கிட, தோராயமான இருப்பிடம் (latitude/longitude) AlAdhan (api.aladhan.com) சேவைக்கு அனுப்பப்படுகிறது. இருப்பிட அனுமதி தராமல் நகரத்தை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
Your location is used for prayer times, the Qibla direction and nearby mosques. It is kept on your phone and not stored on our servers. To calculate prayer times, approximate coordinates are sent to the AlAdhan prayer-times service (api.aladhan.com). You may instead pick your city by hand without granting location access.
3. அறிவிப்புகள் / Notifications
தொழுகை நேரம் (அதான்), இஸ்லாமிய நினைவூட்டல்கள், புதிய உள்ளடக்கம் பற்றிய அறிவிப்புகளுக்கு Firebase Cloud Messaging பயன்படுகிறது. இதற்கு ஒரு அறிவிப்பு token உருவாகும். போனின் அல்லது ஆப்பின் அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.
Notifications for prayer times, reminders and new content use Firebase Cloud Messaging, which creates a notification token. You can turn them off at any time in your phone's or the app's settings.
4. விளம்பரங்கள் / Advertising (Google AdMob)
ஆப்பை இலவசமாக வைத்திருக்க Google AdMob விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. பொருத்தமான விளம்பரங்களுக்காக Google உங்கள் போனின் விளம்பர ID-ஐப் பயன்படுத்தலாம். போனின் அமைப்புகளில் இதை மாற்றலாம் அல்லது நீக்கலாம்.
To keep the app free we show ads through Google AdMob. Google may use your device's advertising ID to show relevant ads; you can reset or delete it in your phone's settings. See how Google uses data in ads.
5. பயன்பாட்டுப் புள்ளிவிவரம் & பிழை அறிக்கைகள் / Analytics and crash reports
ஆப்பை மேம்படுத்த, Firebase Analytics அநாமதேயமான பயன்பாட்டுப் புள்ளிவிவரங்களையும் (எந்தப் பக்கங்கள் பயன்படுகின்றன போன்றவை), Firebase Crashlytics ஆப் crash ஆனால் அதன் தொழில்நுட்ப விவரங்களையும் (போன் மாடல், Android பதிப்பு) சேகரிக்கின்றன. இவை உங்களை அடையாளம் காட்டுவதில்லை.
To improve the app, Firebase Analytics collects anonymous usage statistics (such as which screens are used) and Firebase Crashlytics collects technical details when the app crashes (such as device model and Android version). They do not identify you.
6. பார்வைகள், விருப்பங்கள் / Views and likes
வீடியோ, கட்டுரை, பயான் எத்தனை முறை பார்க்கப்பட்டது, விரும்பப்பட்டது என்பது அநாமதேய எண்ணிக்கையாக மட்டுமே கணக்கிடப்படுகிறது. நீங்கள் விரும்பியவை உங்கள் போனில் மட்டுமே நினைவில் வைக்கப்படுகின்றன.
Views and likes of videos, articles and talks are counted only as anonymous totals. What you liked is remembered on your phone only.
7. கேம்ஸ் / Games and leaderboard
கேம்ஸ் தரவரிசையில் (leaderboard) காட்ட, நீங்கள் தேர்ந்தெடுக்கும் புனைப்பெயரும் (nickname), போனில் உருவாகும் ஒரு சீரற்ற ID-யும், உங்கள் மதிப்பெண்களும் எங்கள் server-ல் சேமிக்கப்படுகின்றன. உண்மையான பெயரைப் பயன்படுத்த வேண்டியதில்லை.
To show the games leaderboard, the nickname you choose, a random ID created on your phone and your scores are stored on our server. You do not need to use your real name.
8. சேவை வழங்குநர்கள் / Service providers
- Google Firebase (Cloud Firestore, Realtime Database, Cloud Messaging, Analytics, Crashlytics, Remote Config)
- Google AdMob
- Cloudflare R2 (படங்கள், வீடியோக்கள், ஒலிகள் வழங்க / to deliver images, videos and audio)
- AlAdhan (தொழுகை நேரம் / prayer times)
- everyayah.com, mp3quran.net, quranicaudio.com (குர்ஆன் ஒலி / Quran audio)
9. குழந்தைகள் / Children
இந்த ஆப் அனைத்து வயதினருக்குமானது; 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து தெரிந்தே தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிப்பதில்லை.
The app is for all ages; we do not knowingly collect personal information from children under 13.
10. மாற்றங்கள் & தொடர்பு / Changes and contact
இந்தக் கொள்கை மாறினால் இந்தப் பக்கத்தில் புதுப்பிக்கப்படும். கேள்விகளுக்கு: tamilislamicproofficial@gmail.com
Any changes will be posted on this page. Questions: tamilislamicproofficial@gmail.com